கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளனர் .ஆனால் அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்த சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல..!
“கனடாவில் காலிஸ்தானின் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர் .ஆனால் அவர்கள் ஒட்டு மொத்த சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல “என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் கடந்த மாதம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின.இந்த விவகாரத்தில் இந்தியா கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையிலேயே அண்மையில் ஒட்டாவா நகரில் இடம்பெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது கனடாவின் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.