இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைகிறது..!
இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைய இருக்கிறது.
இதே வேளை எதிர் வரும் 12 ம் திகதிக்குள் தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதே வேளை தொகுதியளவில் இயங்கும் அனைத்து அலுவலகங்களையும் எதிர்வரும் 12ம் திகதி நள்ளிரவுடன் அகற்ற வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த திகதியிலிருந்து வேட்பாளர்கள் தொகுதிக்கு ஒரு அலுவலகத்தை மாத்திரம் வைத்திருக்காலாம்.அத்துடன் வேட்பாளரின் வீட்டை அலுவலகமாக பயன்படுத்த முடியும் என்றும் ,எனினும் அந்த அலுவலகங்களில் காட்சிபடுத்தவோ அல்லது பிரச்சார பணிகளை செய்யவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.