பத்தாவது நாடாளுமன்ற சபைத் தலைவராக பிமல் ரத்நாயக்க

சிறீலங்காவின் பத்தாவது நாடாளுமன்ற சபை தலைவராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்ட்டம் இன்று இடம்பெற்ற வேளையிலேயே இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நாள் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக நியமிக்கப்படட பிமல் அவர்கள் இன்று அந்த அமைச்சரவைக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை நாடாளுமன்ற பிரதம கொறாடாவாக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டிருக்கிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவையைத் தொடர்ந்து, ஏற்கனவே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் புதிய நகர்வுகளில், அடுத்த கட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *