தற்கொலை தாக்குதலில் 12 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு..!
நேற்று இரவு பாகிஸ்தானின் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் படையினரின் சோதனை சாவடி மீது தற்கொலை தாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சோதனை சாவடியின் மீது வெடிகுண்டுகளுடன் வந்த கார் மோதி வெடித்து சிதறியுள்ளது.இதன் போது பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினர் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கி தாக்குதல் நடந்த நிலையில் 06 பயஙகரவாதிகள் உயிரிழந்ததுடன், இச்சம்பவத்தில் காயமடைந்த பாகிஸ்தானிய இராணுவத்தினர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த சம்பவம் இடம பெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.