தொழிலதிபர் அதானிக்கு எதிராக நிவ்யோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்..!
பிரபல தொழிலதிபர் அதானிக்கு எதிராக நிவ்யோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டொலர்கள் இலஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்தாக குறிப்பிட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்று முறைக்கேட்டில் ஈடுப்பட்டதாக தெரிவித்து ,அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையங்கள் தரப்பில் நிவ்யோர்க் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய 2021ஜூலை ,2022 பெப்ரவரி க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஒடிசா,தமிழ்நாடு,ஜம்பு காஷ்மீர்,சத்தீஷ்கர்,ஆந்திரபிரதேச மாநிலங்கள் ஆகியவற்றில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 21 நாட்களுக்குள் நேரில் சமூகமளித்து தங்கள் தரப்பு விளக்கத்தினை வழங்க வேண்டும் என அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.