மழையுடனான வானிலை..!
இன்றிலிருந்து 28ம் திகதி வரை மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மல்வத்து ஓயா,கனகராயனாறு, பறங்கி ஆறு, மா ஓயா, யான் ஓயா, மஹாவலி கங்கை, மாதுரு ஓயா, கல் ஓயா,
ஹெடா ஓயா, முந்தேனியாறு மற்றும் விலா ஓயா படுகைகள், போன்ற தாழ்வான மற்றும் ஆற்றுப் படுக்கைகளில் வெள்ளப்பெருக்கு அபாய நிலைமைகள் ஏற்படக் கூடும் என வளமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதே வேளை மத்திய,ஊவா மாகாணங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.