பனிபொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!
தென்கொரியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த பனிப்பொலிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குவாங்கன்,வடக்கு சங்ஷியாங்,வடக்கு ஜிலாங் ஆகிய இடங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.மேலும் தலைநகர் சியோல்,இன்சியான் ஆகிய இடங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு தற்போது -2 டிகிரி யை கடந்த வெப்ப நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக அங்கு அதிகமான குளிர் நிலவுகிறது.
இதனையடுத்து அங்குள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.மேலும் சர்வதேச விமான சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.மற்றும் புகையிரத சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.