பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்..!
கடந்த ஓராண்டிற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்பதை வலியுருத்தி ஐ.நா சபையில் “பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு” என்ற பெயரில் செனகல் நாடு ஒரு திட்டத்தை முன்வைத்தது.
இதனையடுத்து விவாதம் நடைப்பெற்றிருந்தது.இதனை தொடரந்து வாக்கெடுப்பு நடைப்பெற்றது.இந்த வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 156 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.இதே வேளை 8 நாடுகள் இதற்கு எதிர்த்து வாக்களித்தன. 7 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.