அமெரிக்காவில் நிலநடுக்கம் பதிவு..!
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கேப் மென்டோசினோ பகுயில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 7.0ஆக பதிவாகியிருந்ததாக தேசிய புவிநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ அழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.