ரஷ்யாவில் தஞ்சமடைந்த சிரிய ஜனாதிபதி..!
சிரியாவில் இருந்து தப்பியோடுடிய சிரிய ஜனாதிபதிஅசாத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.”ஜனாதிபதி அசாத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மொஸ்கோ நகரிற்கு வந்துள்ளனர்.ரஷ்யா மனிதபிமான அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.
சிரியா வில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணவேண்டும் என எப்போதும் ரஷ்யா கூறிவருகிறது .ஐ.நா மத்தியஸ்தம் செய்யும் பேச்சு வார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.ரஷ்ய அரசின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது என்று வெளியிடப்பட்டுள்ளது.