வெற்றிகரமாக 06ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ‘தமிழா தமிழ் பேசும் புலனம்”
ஆயிரம் மொழிகள் இருந்தாலும் அது நம் தாய் தமிழ் மொழிக்கு ஈடாகாது.அன்னை தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.இப்படிப்பட்ட தமிழால் ஒன்றிணைந்த தளமே நம் “தமிழா தமிழ் பேசு புலனம்”.

இயல்,இசை,நாடகம் என முத்தமிழையும் தன்னகத்தே கொண்டு தரணியில் தலை நிமிர்ந்து வலம் வருகிறது “தமிழா தமிழ் பேசு புலனம்”.இந்த வருடத்தில் வெற்றிகரமாக 5வது ஆண்டினை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
இணையம் ஊடாக உலகம் முழுவதுமிருந்து தன் அன்பால் அணைவரையும் இணைத்து தன்னிகரில்லாத சேவை புரிந்து வருகிறது.பல போராட்டத்திற்கு பிறகு தமிழால் சேவையாற்ற வேண்டும் என்ற மகத்தான நோக்கில் நிறுவனர் கலாநிதி. பி. சுதந்திர ஜேம்ஸ் ஐயாவினால் 2019-12-09 அன்று ஆரம்பிக்கப்பட்டது.அன்று முதல் இன்று வரை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமான போட்டிகள் நடைப்பெறுகிறது.அதில் ஆர்வமாக பலரும் பங்கேற்று தங்களது திறைமைகளை வெளிப்படுத்துகின்றனர்.பங்கேற்பாளர்களுக்கு அழிகிய வண்ணமயமான சான்றிதழ் வழங்கப்படுகிறது.நடுவர்களின் பின்னோட்டங்கள் என்பன நிகழ்ச்சியை மென்மேலும் அலங்கரிக்கின்றன.கவிதை,கவியரங்கம்,நாடகத்தமிழ்,பாடல்,சித்திரப்போட்டி,திருக்குறள்,இலக்கியம்,பட்டிமன்றம் என பலதரப்பட்ட போட்டிகள் நடைப்பெறுகின்றன.அரசியல்,இனம்,மதம் என எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் தமிழால் மாத்திரம் இணைந்த ஒரு கலைக்குடும்பம்.
இதில் நிறைய தன்னார்வலர்கள் இணைந்து வழிதடத்துவது மிக சிறப்புக்குறிய விடயமாகும் அந்த வகையில் மூத்த நெறியாளர்கள்
உயர்திரு. அ. ஜாபர் சாதிக்
உயர்திரு. விக்டர் ஜான்சன் ஆலஞ்சி
உயர்திரு. எஸ். ஆர். கே. ஜாபர் சாதிக்
உயர்திரு. க. முபாரக்
திருமதி. ஒ. அமுதா முருகையன்
திருமதி. முனைவர். ஆ. சுசீலா மேரி
திருமதி. சரீனா உவைஸ்
செல்வி. அ. மு. வித்யா சாரா என்போர் தங்களது அளப்பரிய சேவையினை வழங்கிவருகின்றனர்.மேலும் தளத்தில் இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளும் அன்பாலும் அனைத்து பங்களிப்புகளாலும் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் 5 வது ஆண்டிணை முன்னிட்டு விசேட போட்டிகள்,நிகழ்ச்சிகள் என்பனவும் இடம் பெற்றன.இதில் பலர் பங்குபற்றி தங்களது திறமைகளையும் வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தி இருந்தனர்.மேலும் பல சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று போல் என்றும் தமிழால் இணைந்து தமிழ் சேவைப்புரிய வெற்றிநடையும் தமிழா தமிழ் பேசு புலனத்திற்கும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறது.