உக்ரைன் மீது வான்வழி தாக்குதல்..!
நேற்று நள்ளிரவு முதல் ரஷ்யாவானது உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவருகிறது.
உக்ரைனின் மின் உற்பத்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதி நவீன ஏவுகணைகள்,ட்ரோன்கள் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
2 வருடத்திற்கு மேலாக உக்ரைன் ரஷ்யா போர் நீடித்துவருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன்,பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் உலகளவில் பாரிய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.