அமெரிக்காவின் தலையீட்டை விரும்பவில்லை-சீனா..!
சீனாவின் உள்துறை விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சீன தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
இது தொடரபாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது “சீனா தனது இறையாண்மை,பாதுகாப்பு,மற்றும் வளர்ச்சி சார்ந்த நலன்களை உறுதியுடன் பாதுகாக்கிறது.மேலும் சீனா மீது சட்டவிரோதமான முறையில் அமெரிக்கா அடக்கு முறையை கையாள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.குறிப்பாக தாய்வான் உள்ளிட்ட சீனாவின் உள்துறை சார்ந்த பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடுவதை சீனா எதிர்க்கிறது”என்று தெரிவித்துள்ளார்.