நோர்த்ஸ்ட்ரீம் 2 எரிவாயுக்குளாய்க்குப் பதிலாக சீனாவை நோக்கி எரிவாயுக்குளாய் என்றது ரஷ்யா.

ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான எரிவாயுவில் பெரும்பகுதியைக் கொடுத்துவந்த ரஷ்யா அதை மேலும் அதிகரிப்பதற்காகத் தயார் செய்துவந்த நோர்த்ஸ்ட்ரீம் 2 எரிவாயுக்குளாய் கடைசிக் கட்டத்தில் நிறுத்தப்பட்டது. உக்ரேன் மீதான போரை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான தொடர்புகளை வெட்டிக்கொண்டதால் ஜேர்மனியில் ஒரு எல்லையைக் கொண்ட அந்த எரிவாயுக்குளாய் பாவனைக்கு எடுக்கப்படாதது மட்டுமன்றி ஏற்கனவே பாவிக்கப்பட்டுவந்த நோர்த்ஸ்ட்ரீம் 1 எரிவாயுக்குளாயும் சமீபத்தில் மூடப்பட்டது. தயார் நிலையிலிருந்த நோர்த்ஸ்ட்ரீம் 2 எரிவாயுக்குளாய்க்குப் பதிலாக பவர் ஒவ் சைபீரியா 2 என்ற எரிவாயுக்குளாய் சீனாவை நோக்கி நிர்மாணிக்கப்படும் என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது.

இதுபற்றி ரஷ்யாவின் எரிசக்தித்துறை அமைச்சர் அலெக்சாந்தர் நோவாக் தெரிவித்தார். அந்தக் குளாய்கள் மூலம் வருடாவருடம் 50 கியூபிக் மீற்றர் எரிவாயுவைச் சீனாவுக்கு விற்கும் ஒப்பந்தம் தயாராகி வருவதாக அவர் தெரிவித்தார். அந்தக் குளாய் ரஷ்யா – மங்கோலியா மூலமாகச் சீனாவுக்குப் போடப்படும். 2024 இல் அதற்கான கட்டுமான வேலைகள் ஆரம்பமாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *