விண்வெளியில் நடந்து சாதனை நிகழ்த்தினார் சீனப்பெண்.

சீனா தனது விண்வெளித்திட்டத்தில் மேலும் ஒரு படி முன்னேறியிருக்கிறது. வாங் யாபிங் என்ற 41 என்ற சீனப்பெண் விண்வெளியில் நடந்து  சரித்திரத்தில் தனது பெயரைப் பொறித்திருக்கிறாள். 

விண்வெளியில் தனது ஆராய்ச்சி நிலையத்தைப் பொருத்திக்கொண்டிருந்தும் சீனாவின் முயற்சியின் போதே ஷாய் ஷிகாங் என்ற சகாவுடன் சேர்ந்து வாங் யாபிங் சுமார் ஆறு மணி நேரம் விண்வெளியில் நடந்திருக்கிறார். மூன்றாவது தாய்க்காநௌட் [விண்வெளிவீரர்] யே குவாங்பூ விண்கலத்துக்குள் இருந்து அவ்விருவருக்கும் உதவினார்.

விண்வெளியில் தன் கொடியை நாட்டுவதில் சீனாவின் இன்னொரு மைல்கல்லாக அதன் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் சியான்கொங் நிறுவப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் கடைசிப் பகுதியில் முழுவதுமாகத் தாயாராகிவிடும் என்று கணிக்கப்படும் சியாங்கொங் ஆராய்ச்சி நிலையம் 66 தொன் எடையுள்ளதாக இருக்கும். 

ISS என்றழைக்கப்படும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் முதலாவது 1998 இல் அமைக்கப்பட்டது. அதன் மொத்த எடை 450 தொன் ஆகும். அந்த ஆராய்ச்சி நிலையம் வெவ்வேறு நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கே 200 நாட்கள் தங்கியிருந்துவிட்டு நான்கு விண்வெளிப் பயணிகள் நேற்றுத்தான் நாடு திரும்பியிருக்கின்றனர். தொடர்ந்தும் மூன்று பேர் அங்கே தங்கியிருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்துகொள்ள மேலும் மூவர் நாளை விண்வெளிக்கு அனுப்பப்படவிருக்கிறார்கள்.

ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் சீனா தனது தாய்க்காநௌட்டுகளை சியாங்கொங் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவும் வேலைகளுக்காக அனுப்பியிருந்தது. வாங் யாபிங்கும் அவரது சகாக்களும் ஆறு மாதங்கள் அங்கே தங்கியிருப்பார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்