E-kalvi வெளியிட்ட தமிழ் மாணவர்களுக்கான செயலி – WSG 1.0

தமிழ் மாணவர்கள் தாங்களாகவே தம்மை பரீட்சைகளுக்கு தயார்படுத்த தேவையான வினாக்கொத்துக்களுடனும் விளக்கங்களுடனும் கூடியதுமான செயலியை E-Kalvi அமைப்பு அண்மையில் வெளியீடு செய்துள்ளது. கைத்தொலைபேசியிலோ அல்லது கணனியிலோ குறித்த செயலியை தரவிறக்கி சில நிமிடங்களிலேயே பரீட்சைளுக்கான வினாக்கள் போன்று தயார்செய்து தம்மைத்தாமே பரீட்சித்து பார்க்க ஏதுவாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த செயலியை மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பாட்டிற்காக வெளியீடு செய்யப்பட்டது.இணைய விழாவாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் திரு உதயகுமார் அவர்களும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திரு.புள்ளநாயகம் அவர்களும் பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகள் அபிவிருத்திப் பணிப்பாளர் திரு.முரளீதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

E-Kalvi நிறுவனத்தின் இன்னுமொரு மிக முக்கியமான மைல் கல் பயணம் என்று அறிவித்துள்ள E-Kalvi அமைப்பு பின்வரும் வாய்ப்புக்கள் தற்சமயம் இந்த செயலியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

WSG 1.0 செயலியில் பின்வரும் முக்கிய பிரதான அம்சங்கள்
பாடங்களை தெரிவு செய்யும் வசதி (தற்பொழுது கணிதம் மாத்திரம்)
✅ வகுப்பை தெரிவு செய்யும் வசதி (தற்பொழுது 10, 11 மாத்திரம்)
✅ விடைகள், உசாத்துணைகள் தனியாக PDF ஆக தரவிறக்கும் வசதி. Youtube உசாத்துணைகளும் உண்டு.
✅ பாடசாலைகளின் இலச்சினையை தாமாகவே பொறிக்கும் வசதி
✅ வகுப்புக்களை தனியாகவோ சேர்த்தோ தெரிவு செய்யும் வசதி
✅ பாடப்புத்தக அத்தியாயங்களுக்கு தனியாக அல்லது கூட்டாக செயலட்டை / வினாத்தாள் தயாரிக்கும் வசதி
✅ பாடப்பிரிவுகளுக்கு தனியாக அல்லது கூட்டாக செயலட்டை / வினாத்தாள் தயாரிக்கும் வசதி
✅ ELC தலைப்புக்களில் தனியாக அல்லது கூட்டாக செயலட்டை/வினாத்தாள் தயாரிக்கும் வசதி
✅ கடின மட்டங்களை குறிப்பிட்டோ அல்லது எழுமாற்றாகவோ அல்லது கூட்டாக செயலட்டை/வினாத்தாள் தயாரிக்கும் வசதி
✅ தேவையற்ற வினாக்களை தரவிறக்குமுன் அகற்றும் வசதி
✅ வினாக்களுக்கான நேரத்தை தாமாகவே கணக்கிடும் வசதி
✅ இறுதி வினாத்தாள் PDF வடிவில் தரவிறக்கும் வசதி
✅ ஒவ்வொருவரும் தாம் தயாரித்த வினாத்தாள்களை மீண்டும் எடுத்து பாவிக்கும் வசதி.
✅ கடவுச்சொல் மறந்துவிட்டால் அதை மீண்டும் பெறும் வசதி
✅ உதவி தேவையாயின் செயலி பற்றிய விளக்கங்களை பெறும் வசதி.
✅ பாவனையாளரின் பின்னூட்டங்களை தெரிவிக்கும் வசதி

இதனடிப்படையில் மாணவர்கள் தாமாகவே கற்றுத்தேற ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த WSG 1.0 செயலி பலருக்கும் எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும் என பல கல்வியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.