மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை..!
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு,
இலங்கை மின்சாரசபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய முன் மொழிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை மாதம் முதல் மின்கட்டண குறைப்பு சதவீதத்தை அறிவிக்க முடியும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.