ஜேர்மனி ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என எலான் மாஸ்க் தெரிவிப்பு.
ஜேர்மன் ஜனாதிபதி ஓலாப் ஷோல்ஸ் பதவி விலக வேண்டும் என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.”ஜேர்மன் அதிபர் ஓலாப் ஷோல்ஸ் திறமையற்ற முட்டாள்;அவர் பதவி விலக வேண்டும்”என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஜேர்மனியின் மெக்டெக்பேர்க்கில் சிறப்பு சந்தை இடம்பெற்றது. இதன் போது கார் ஒன்று வேகமாக வந்து மோதுண்டது. இதன் போது 2 பேர் உயிரிழந்ததுடன்,60 பேர் காயங்களுக்குள்ளானார்கள்.இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த பின்னணியிலேயே எலான் மாஸ்க் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.