விண்வெளியைக் கைப்பற்றுவதில் ஏலொன் மஸ்க் மூன்றாம் தடவையும் தோல்வியடைந்தார்.

அமெரிக்க விண்வெளிப் பயண நிறுவனம் SpaceX தனியாரை விண்வெளிக்கு அனுப்புதற்காகத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. டெஸ்லா வாகன நிறுவன உரிமையாளரும், உலகின் மிகப் பெரும் பணக்காரருமான ஏலொன் மஸ்க்கின் முக்கிய திட்டங்களில் அதுவும் ஒன்றாகும். 

பொகா சிகா, டெக்ஸாஸிலிருந்து வானத்திற்குப் பரீட்சித்தமாக ஏவப்பட்ட விண்கலம் வானத்தில் வெடித்து எரிந்துவிட்டது. திட்டப்படி வானத்தில் 10 கி.மீ உயரத்தில் ஸ்டார்ட்ஷிப் 10 தனக்கு ஏவப்பட்ட செயல்களைச் செய்தது. அதன் பின்பு அதை மீண்டும் இறக்குவதற்காக முயற்சிகள் நடத்தப்பட்டபோது ஆரம்பத்தில் அவை வெற்றியளிப்பது போலத் தோன்றினாலும், விண்கலத்தின் கீழ்ப்பகுதியில் தீப்பிடிக்க முழுவதுமே எரிந்துவிட்டது.

இது SpaceX நிறுவனத்தின் தோல்வியடைந்த மூன்றாவது  முயற்சியாகும். இன்னும் ஐந்து வருடங்களில் விண்வெளிக்குத் தனியாரை அனுப்புவதாகத் திட்டமிட்டிருக்கிறார் ஏலொன் மஸ்க்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *