ஏமனில் வான்வழி தாக்குதல்..!
ஏமனில் இருந்து செயற்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது நேற்று அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏமனின் தலைநகர் சனாவில் அமைந்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள்,ஆயுத கிடங்குகள்,கட்டுப்பாட்டு நிலையங்கள் என்பவற்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திவருகிறது.இந்த போரில் அமெரிக்காவானது இஸ்ரேலிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.இந்த பின்னணியிலேயே அமெரிக்காவானது ஏமனில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.