இன்றைய நிலையில் எல்லாம் இப்படி தான்..!
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 *அட ! கடவுளே!* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
துன்பம் வந்தால்
கடவுளைக்
கூப்பிடுகிறார்கள்…
இன்பம் வந்தால்
பக்கத்து வீட்டுக்காரனைக் கூட
கூப்பிடுவது இல்லையே….!
தோற்கும் போது
கடவுள் செயல் என்கிறார்கள்…!
வெல்லும் போது
என் செயல் என்கிறார்களே…!
நஷ்டத்தை
கொடுக்கும் போது
கல் என்கிறார்கள்….
லாபத்தைக் கொடுக்கும்போது
கடவுள் என்கிறார்களே ….
பதவிக்கு வரும் வரை
மக்கள்தான் கடவுள் என்கிறார்கள்…
பதவிக்கு வந்துவிட்டால்
கடவுளே !
நான் தான்
என்கிறார்கள்…..
நினைத்தது நடக்காவிட்டால்
வசை அபிஷேகம்
செய்கிறார்கள் கடவுளுக்கு…
நடந்து விட்டால்
பாலபிஷேகம்
செய்கின்றார்களே!!
ஒரு சந்தேகம்….
மனிதனை
கடவுள்
வாழ வைக்கிறதா….?
கடவுளை
மனிதன்
வாழ வைக்கின்றானா ..? *கவிதை ரசிகன்*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱