கண்ணீர்..!
குற்றம்
செய்யாதவர்கள்
அழுது
கண்ணீர்
சிந்தி
குற்றம்
இழைத்தவர்கள்
வீம்பில்
சிரிக்கும்
கலிகாலம்.
ஏழைகளின்
கண்ணீர்
வழி
இல்லாத
வலிகள்
நிறைந்தது.
இதயம்
ஊண்
உடல்
உயிர்
மனம்
ஆன்மா
ஒளி
உடல்
பஞ்சகோசங்களின்
உணர்ச்சி
செறிவுகளின்
வேதனைகள்
சுகங்களை
அழகாக
வெளிப்படுத்தும்
அனுபவ
எதார்த்தம்
கண்ணீர்.
இங்கு
பெண்
ஆண்
குடும்பம்
பக்தி
மதம்
இரக்கம்
கருணை
அன்பு
மொழி
காதல்
ஆனந்த
கண்ணீர்
காண்பது
அரிது.
எல்லாம்
எதிர்பார்ப்பு
நிறைந்த
உலகத்தில்
துக்கத்தின்
தொண்டை
அடைப்பும்
அழுகையும்
உகுக்கும்
கண்ணீரின்
ஒப்படர்த்தி
செந்நீரை
விட
மீ
அரிது.
இங்கு
சாதிகள்
மதங்கள்
மொழிகள்
நிறங்கள்
இனங்கள்
ஆண்
பெண்
பாலின
பேதங்கள்
ஏழை
பணக்காரன்
பதவி
அரசியல்
அவலம்
நிறைந்த
உலகில்
எல்லாம்
நடிகர்களே!
இங்கு
ஒவ்வொரு
முகங்களும்
மறைக்கும்
முககவசங்களின்
எண்ணிக்கை
அளவையில்
அடங்காது.
கண்ணீர்
துயரம்
நிறைந்தவர்களின்
நித்திய
ஓடை.
இது
வற்றுவது
அரிது.
கேலோமி
மேட்டூர்அணை
9842131985