தீ பரவலால் வீடுகள் சேதம்..!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பசுபிக் பொலிசேட்ஸ் பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது. இது நேற்று காலை முதல் இரவு வரை நீடித்த நிலையில் பல வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.இதன் காரணமாக பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சில பகுதிகளில் காற்றின் வேகமானது 60 மைல் அளவில் வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை தீயணைப்பு விமானஙகள் கூட பறக்க முடியாத அளவிற்கு காற்று வீசியதால் தீயணைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.