ஹிக்கடுவ கடற் பிரதேசத்தில் நீராட சென்றவர் மாயம்..!
ஹிக்கடுவ கடற்கரையில் நீராடச்சென்ற நபர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
கனேடிய பிரஜையான இவர் நேற்று மாலை குறித்த கடற்கரையின் அபாய பாதாதை தாண்டிச் சென்று குளிக்கச் சென்றுள்ளார்.இதன் போதே அடித்து செல்லப்பட்டுள்ளார்.இவருக்கு 19 வயதாகும்.இதனை தொடர்ந்து இவரை தேடும் பணியில் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உயிர்காக்கும் படைகள் ஈடுப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.