நாளை, வானிலை எப்படி இருக்கும்..!
கிழக்கு,வடக்கு,வடமத்திய,மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை,நாளை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை,நுவரெலியா,ஊவா மாகாணங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.