மீண்டும் பயன் பாட்டிற்கு வந்த டிக்டொக்..!
டிக்டொக் செயலி அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஜோபைடன் ஆட்சியின் போது பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து டிக்டொக் செயலிக்கு எதிராக நாடாளுமன்றத்தில சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ,தற்போது பதவி ஏற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் டிக்டொக் கிற்கு 90 நாட்கள் விலக்கு அளிப்பார் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில் மீண்டும் டிக்டொக் செயலியானது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இது தொடர்பாக டிக்டொக் கருத்து தெரிவித்துள்ளது.”டிக்டொக் சேவையை வழங்குவதற்கு தேவையான உத்தரவை வழங்கிய டொனால்ட் ட்ரம்ப் ற்கு நன்றி.நீண்ட கால தீர்வுக்கு ட்ரம்ப் உடன் இணைந்து பணியாற்றுவோம்”என்று தெரிவித்துள்ளது.