இரத்த உறவினர்..!
உறவினர்
முன்னால் போனால்
முட்டும்!
பின்னால் வந்தால்
உதைக்கும்!
என் இல்லச் சமையலும் அவர்களது
ருசியின் படி!
நிதி நீதி முடிவு
எல்லாமே அவர்களது
எண்ணப்படி!
இப்படி மூச்சு முட்ட வைக்கும் உறவினர்
வருகை கண்டு
ஓடவும் முடியாது!
ஒதுங்கவும் முடியாது!
நாவிற்கும் தொண்டைக்கும்
இடையிலும்

நெஞ்சுக்கும்
வயிற்றிற்கும் இடையிலும்
எப்போதும் இனம்புரியாத
கலவரம் ஊட்டிடும்
ரத்த உறவினர்
வாழட்டும் நூறாண்டு!
பா ஆக்கம்
என்றும் அன்புடன்
நா.ஆனந்தி சேது
சீர்மிகு சென்னை