கலவரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படவேண்டும்..!
கடந்த வருடம் பங்களதேஷத்தில் , ஜூலை முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் நடந்த கலவரங்களின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400 ஐ தாண்டும் என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு படைகள் மனித உரிமை மீறலில் ஈடுப்பட்டதாகவும் ,போராட்ட காரர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாகவும் ஐ.நா தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என ஐ.நா கூறியுள்ளது.