லெபனான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்..!
லெபனான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.லெபனானின் சிடோன் நகரில் முக்கிய சாலையில் சென்ற கார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது ஹமாஸ் போராளிகளின் முக்கிய தளபதி முஹமது ஷாயின் உயிரிழந்துள்ளார்.இவர் ஹமாஸ் போராளிகளின் லெபனான் பிரிவு தலைவராக இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
