நான் திரும்பி வருவேன்-ஷேக் ஹசீனா..!
நான் திரும்பி வருவேன் என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது ” நான் திரும்பி வருவேன்.அதனால் தான் அல்லா என்னை உயிருடன் வைத்திருக்கிறான் .பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்.பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் நான் உதவி செய்வேன் .போராட்டத்தின் போது மக்களை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெறுவதை உறுதி செய்வேன்.முஹமது யூனுஸ் ஆட்சி செய்ய தகுதியற்றவர்.கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு யூனுஸின் ஆட்சியின் கீழ் நீதி கிடைக்காது.” என்று தெரிவித்துள்ளார்.
பங்களதேசத்தில் கட்சி சார்ந்த நிகழ்வில் காணொளி மூலம் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.