ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!
ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 3.37மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலநடுக்கமானது 180 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
