பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றுகிறது- ஆப்கானிஸ்தான்..!
பாகிஸ் தானிலிருந்து ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றுவதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.” பாகிஸ்தான் அரசாங்கம் அனைத்து ஆப்கானிஸ்தான் அகதிகளையும் நாட்டிலிருந்து வெளியேற்றவிரும்புகிறது.வெளியேற்றம் விறைவாக நடக்கிறது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் அருகிலுள்ள ராவல்பிண்டியிலும் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டினர் சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.
இந்த நகரங்களை விட்டு வெளியேறி பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கு இடம் பெயரும் படி காவல் துறையினர் உத்தரவிடுகின்றனர்.முறையான அறிவிப்பு இன்றி ஆப்கானிஸ்தானியர்களை பிடித்து விசாரிக்கின்றார்கள்.இது தொடர்பாக இஸ்லாமாபாத்திலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்திற்கு எந்த ஒரு முறையான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.” என்று ஆப்கானிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.
