பனி பொழிவு..!
பனிப்பொழிவு
❄️ 🌨️ 🌨️ 🌨️ 🌨️ 🌨️ 🌨️ ❄️
மார்கழி மாதம் வந்ததும்
மகிழ்ச்சி பொங்குமே
குளிரில் உடல் நடுங்க
போர்வைக்குள் சரணடைந்தோம்…
மாதம் முழுவதும்
பள்ளி விடுமுறை
மாந்தர் விரும்பி
சுற்றுலா செல்வதில்
காட்டினரே ஆர்வம்…
நம் நாட்டின் பனிப்பொழிவு
அதனால் வரும் குளிர்
அனைத்தும் இலகுவாக
தாங்கிட முடியுமே…
நாடுகள் சில உண்டு
அதிலே பனிப்பொழிவு
பனிமலையாக மாறி
வாட்டி எடுக்குமே மாந்தரை…

எந்நாட்டோடு ஒப்பிடாடாலும்
நம் நாட்டுக்கு ஈடாகுமோ
கால நிலை கூட.. நம்
சக்திக்கு ஏற்ப கிடைப்பதும்
நமக்கான வரமே…
சரீனா உவைஸ் ✍️