இந்திய மீனவர்கள் விடுதலை..!
22 இந்திய மீனவர்களை கராச்சி மாலிர் சிறையிலிருந்து விடுவித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.அவர்கள் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான முறையில் பாகிஸ்தான் கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுப்பட்டபோது கைது செய்யப்பட்டிருந்தனர்.இதனையடுத்து தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது