சிறுவர் இல்லங்களுக்கு திறன் விளையாட்டு போட்டி நிகழ்வு

களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சிறுவர் இல்லங்களுக்கு மகிழ்விப்போம் மகிழ்வோம் என்னும் தொனிப்பொருளில் திறன் விளையாட்டு போட்டி நிகழ்வு நேற்று களுவாஞ்சி சக்தி மகளிர் இல்லத்தில் பட்டிருப்பு களுவாஞ்சிகுடி நன்னடத்தை mnm ரபாஸ் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது விழாவிற்கு பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவான் B.A .ரஞ்சித்குமார் கிழக்கு மாகாண நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர் திருமதி றிஸ்வானி றிபாஸ் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
விளையாட்டு விழாவிற்கு அசீசி இல்லம், திருஞானசம்பந்தர் குருகுலம் ,லண்டன் சிவன் கோயில் மகளிர் இல்லம், சக்தி மகளிர், இல்லம், விபுலானந்தா இல்லம், திலகவதியார் இல்லம் ,ஸ்பார்க் இல்லம், கேமன்ஸ் இல்லம் ஆகிய சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டனர் இதன் போது கிரிக்கெட் கரப்பந்து செஸ் முட்டி உடைத்தல் ஜானகி கண் வைத்தல் ஓட்டம் போன்ற பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கேடயங்கள் போன்ற வழங்கி கெளரவிக்கப்பட்டன.






