பின்னல யானைகள் சரணாலயத்திலிருந்து கடந்த ஆண்டு 956 மில்லியன் ரூபா வருமானம்

பின்னவல யானைகள் சரணாலயத்திலிருந்து கடந்த ஆண்டு 956 மில்லியன் ரூபா வருவாய் கிடைத்துள்ளதாக பின்னவல நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டு ஜனவரியில் ரூ. 122.9 மில்லியனும், பெப்ரவரி 19 ஆம் திகதி நிலவரப்படி ரூ. 60 மில்லியனுக்கும் அதிகமான வருவாயையும் ஈட்ட முடிந்துள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் மிஹிரான் மெதவல தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆண்டின் முதல் 50 நாட்களில் ரூ.183 மில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், 38,239 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் 35,026 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வேகமாக அதிகரித்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.