உக்ரைன் ரஷ்ய போரானது விரைவில் முடிவிற்கு வரும் -டொனால்ட் ட்ரம்
உக்ரைன் ரஷ்ய போரானது விரைவில் முடிவிற்கு வரும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.”ஐரோப்பிய அமைதி படையினரை உக்ரைனில் நிலை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் சம்மதிப்பார் என்று நம்புகிறேன்.ரஷ்ய உக்ரைன் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.போர் இன்னும் ஒரு வாரத்திறகுள் முடிவிற்கு வரும் என எதிர் பார்க்கிறேன்.உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விரைவில் அமெரிக்காவிற்குள் வருவார்.உக்ரைனிலுள்ள அரிய வகை தாதுக்களை எடுத்துக்கொள்ள அமெரிக்காவிற்கு அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் உக்ரைன் விரைவில் கை எழுத்திடும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.