விமானியை கடித்த சிலந்தி..!
ஐபீரியா ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் ஜெர்மனியின் டசல்டார்ப் நகரில் இருந்து ஸ்பெயினின் மேட்ரிக் நகரிற்கு சென்ற வேளை,நடுவானில் பறந்துக்கொண்டிருந்த சமயம் அந்த விமானத்தின் விமானியை சிலந்தி ஒன்று கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து குறித்த விமானிக்கு அலர்ஜி ஏற்பட்ட நிலையில் விமான பணிப்பெண்கள் முதலுதவிப் பெட்டியின் உதவியுடன் விமானிக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இதனிடையே மேட்ரிக் விமான நிலையத்தில் திட்டமிட்டப்படி தரையிறக்கப்பட்டது.இதனையடுத்து பயணிகள் வெளியேறிய பின்னர் விமானம் முழுவதும் பூச்சி கொல்லி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

விமானத்தில் ஏற்றப்பட்ட பொதிகள் ஊடாக சிலந்தி உற் சென்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த நிகழ்வு காரணமாக குறித்த விமானம் மேட்ரிக் விமான நிலையத்தில் 3 மணிததியாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.