புள்ளிகள் வட்டமாகியது..!
சித்திரம்
நான் இட்ட புள்ளிகள்
வட்டங்களாகி மலரின்
இதழானது … இரண்டு மூன்று
கோடுகள் சேர்த்தேன்
செடியானது
முழு சித்திரமானது…
ஒரு வட்டத்தில் சுற்றி
கோடுகள் போட்டேன்
கதிரவன் வந்தான்
வட்டத்தின் கீழ் ஐந்து
கோடுகள் சேர்த்தேன்
குச்சி மனிதன் வந்தான்..
சுவர்களில் கிறுக்கல்கள்
மண் குவியலில் கீறல்கள்
காகிதத்தில் கிறுக்கி
அழித்த கிழிசல்கள்..
பார்ப்பவர் ஆகா
அருமை என்றால்
ஓஹோ என்று உள்ளம்
ஆனந்தத்தில் துள்ளும்..

சிந்தித்து பார்த்தால் மனிதன்
வாழ்க்கை ஜனனம் முதல்
மரணம் வரை சுவரில்லாத
சித்திரம்தான்…
கூற்றம் வந்து
மரணம் என்னும்
அழிப்பான் கொண்டு …
உயிர் என்னும் சித்திரத்தை
அழித்து ( கைப்பற்றி )
உடல் கூட்டை
புதைக்கும் வரை….
சரீனா உவைஸ் ✍️