சிறைச்சாலையையும் சிறை அதிகாரியையும் அகற்றுவதற்காக போராடுகிறோம்- ஹமாஸ் போராளிகள்..!
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் போர் ஆரம்பித்து தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு காணொளியை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுட்டுள்ளார்.இதற்கு இஸ்ரேல் அமெரிக்கா ஆதரவாளர்கள் ஆதரித்த நிலையிலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அந்த காணொளியில் எலான் மாஸ்க் மற்றும் ட்ரம்ப் இருவரும் காஸாவை பணக்கார நகரமாக மாற்றியிருக்கிறார்கள்.உயர்ந்த கட்டிடங்கள்,பரபரப்பான சந்தை ,கடற்கரை என ஆடம்பர வாழ்க்கையை பிரதிபலிக்கும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் நெதன் யாகு ,ட்ரம்ப் உள்ளிட்டவர்கள் கடற்கரையில் அமர்ந்திருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹமாஸ் போராளிகளின் அரசியல் குழு உறுப்பினர் பாசெம் நயீம் கருத்து தெரிவிக்கையில் “துரதிஷ்டவசமாக மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் நலன்களை கருத்திற் கொள்ளாமல் ட்ரம்ப் மீண்டும் தனது கருத்துக்களை முன்மொழிகிறார்.காஸாவை மறு கட்டமைப்பு செய்து ,பொருளாதார மீட்பு ,குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் நாளை காஸா மக்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள்.
ஆனால் பெரிய சிறைச்சாலைக்குள் இருந்துக்கொண்டு அத்தகைய வெற்றியை பெற முடியாது.இந்த சிறைச்சாலை சூழ்நிலைகளை மேம்படுத்த வேண்டும் என நாங்கள் போராடவில்லை.சிறைச்சாலையையும் சிறை அதிகாரியையும் அகற்றுவதற்காகவே போராடுகிறோம்.”என்று தெரிவித்துள்ளார்.
