ஸ்கைப் தளம் நிறுத்தப்படவுள்ளது..!
எதிர் வரும் 5ம் திகதியுடன் ஸ்கைப் தளத்தை நிறுத்த மைக்ரோ சொப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு எஸ்டோனியாவை சேர்ந்த 4 பொறியியலாளர்களால் ஸ்கைப் தளம் உருவாக்கப்பட்டது.இதனையடுத்து வேறு நிறுவனங்களுக்கு கைமாறிய ஸ்கைப் 2011ம் ஆண்டு மைகரோ சொப்ட் நிறுவனத்திடம் வந்து சேர்ந்தது. இதனை 8.5 பில்லியன் டொலர்களுக்கு மைக்ரோ சொப்ட் நிறுவனம் வாங்கியது.
இதனையடுத்து அனைத்து மக்களாலும் ஸ்கைப்தளம் பெரும் வரவேற்பை பெற்றது. 2023 பெப்ரவரி அளவில் 30 கோடியே 60 இலட்சம் பேர் ஸ்கைப் தளத்தை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் ஸ்கைப் தளத்தின் சேவை நிறுத்தம் தொடர்பான அறிவிப்பானது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

micro soft teams தளத்தினை மேலும் விஸ்தரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக micro soft நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
