வடக்கின் பெரும் சமர் நாளை துவக்கம்
வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் Battle of the North கிரிக்கெட் சமர், நாளை மார்ச் மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கவிருக்கிறது. யாழ் மத்தியகல்லூரியும் , யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரி அணியும்பங்குபற்றும் இந்தப் போட்டி,வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகும். 118 தடவையாக இந்த இரு அணிகளும் களம் காணும் போட்டியாகவும் இது அமைந்து காணப்படுகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற ஏற்பாடாகி, மழை காரணமாக இந்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி நாளை துவங்கும் இந்தப்போட்டி, வரும் 8 ம் திகதிவரையில் , 3 நாள்கள் கொண்ட ரெஸ்ட் போட்டியாக இது நடக்கும்.
இந்தப்போட்டிகளில் , இலங்கை அணிகளில் ஏற்கனவே பங்குபற்றிய இளைஞர்கள் இருவரும் பங்குபற்றுகின்றனர். இளையோர் ஆசியக் கிண்ணத்தில் சிறப்பாகச் செயற்பட்ட யாழ் மத்திய அணியின் ரஞ்சித்குமார் நியூட்டன் மற்றும் செயின்ட் ஜோன்ஸ் அணியின் குகதாஸ் மாதுலன் ஆகியோர் தமது அணிகளுகளுக்காக வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்கிவுள்ளனர்.
பலத்த எதிர்பார்ப்பு நிறைந்த இந்தப்போட்டிகளில் , ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் சென்ஜோண்ஸ் கல்லூரி அணி 38 – 29 என்ற அடிப்படையில் வெற்றியை எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.