விறுவிறுப்பாக எதிர்பார்க்கப்படும் பருத்தி நகர் பெரும் சமர்

பருத்தி நகரின் பெரும் சமர்| Battle of Point Pedro என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் துடுப்பெடுத்தாட்டப்போட்டி மேமாதம் 28ம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.

தும்பை சிவப்பிரகாச மாகாவித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் மணியம் கணபதிப்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாகவே இந்த மாபெரும் துடுப்பெடுத்தாட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த துடுப்பெடுத்தாட்டப்போட்டியில் பருத்தி நகரின் முன்னணி விளையாட்டுக்கழகங்களான தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது.

இந்தப்போட்டியானது மாதனை கண்ணகை அம்மன் ஆலய விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்போதனா வைத்தியசாலை வைத்தியர் , வைத்திய கலாநிதி ஆர்.கௌதமன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்த துடுப்பெடுத்தாட்ட நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிநடையில் நேரலையாக ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரலை ஒளிபரப்பாகவுள்ள இணைப்பு கீழே 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *