திருகோணமலை இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் நடாத்தும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

திருக்கோணமலை இந்துக்கலூரி பழைய மாணவர் ( பிரித்தானியா) சங்கத்தினால் நடத்தப்படும் மாபெரும் பூப்பந்தாட்ட( Trinets Badminton Tournament) சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2023 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் Harrow Leisure Centre, Christchurch Ave, Harrow, HA3 5BD என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.

வயது 13,15,17,35,40,50,60, மற்றும் திறந்த பிரிவுகளுக்கான போட்டிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆண், பெண் இருபாலினத்தவரும் பங்குகொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கியமாக இது ஒர் தமிழ் சமூக நிகழ்வாகும். எனவே இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுதுவது : நகீரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *