சென்ஜோண்ஸ் இன்று பலம்| வடக்கின் பெருஞ்சமர் முதல் நாள் ஆட்டம் நிறைவு
வடக்கின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி எதிர் யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரி மோதும் இன்றைய துடுப்பெடுத்தாட்டப் போட்டியின் முதல் நாளில், சென்ஜோண்ஸ் பலமான நிலையில் ஆட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவந்துள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற சென்ஜோண்ஸ் முதலில் களத்தடுப்பிற்கு இறங்க , மத்தியகல்லூரி துடுப்பெடுத்தாடத் துவங்கியது,
ஆட்டத்தில் யாழ் மத்தியகல்லூரி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் ஆகக்கூடுதலாக மத்தியகல்லூரியின் அபிஷேக் 27 ஓட்டங்களை எடுக்க, சென்ஜோண்ஸ் கல்லூரியின் அஷ்னாத் 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
தொடர்ந்து களமிறங்கிய சென்ஜோண்ஸ் கல்லூரி அணி , இன்றைய முதல் நாள் நிறைவு வரை, அணிக்காக 104 ஓட்டங்களை எடுத்து 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்திருக்கிறது. களத்தில் அனுஷாந் 49 ஒட்டங்களுடனும் அஷ்னாத் 29ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றனர். நாளை காலையும் அவர்கள் நிதான ஆட்டம் தொடருமானால் சென்ஜோண்ஸ் இன்னும் வலுவான நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் நியூட்டன் இதுவரை சிறப்பாகப் பந்து வீசி 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.