TSSA Uk ஆதரவில் யாழ்மாவட்ட பாடசாலை அணிகள் மோதும் வலைப்பந்தாட்ட போட்டிகள் நாளை
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில் வலைப்பந்தாட்டத்தை வளர்க்கும் நோக்குடன் , ஐக்கிய இராச்சிய தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்க (TSSA UK) அனுசரணையுடன் , யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கம் ஏற்பாடு செய்யும் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் மார்ச் மாதம் 8ம் திகதி நாளை காலை துவங்கவுள்ளன.

யாழ்மாவட்ட பாடசாலை அணிகளில், 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான அணிகள், இந்தப்போட்டிகளில் களம் காணவுள்ளன.
இதற்கான போட்டி அட்டவணை தயாரிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை ( 08 /03 /2025 ) காலைவேளையில் துவங்கும் இந்தப்போட்டிகள் , ஞாயிற்றுக்கிழமை (09 /03 2025 ) மாலை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டிகள் உள்ளடங்கலாக , யாழ் இந்து மகளிர் கல்லூரி மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டிகள் அனைத்தும் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவரான செல்வி மனோன்மணி தலைமையில் இடம்பெறும் இந்த போட்டிகளின் இறுதிப்போட்டி , மாபெரும் விசேட நிகழ்ச்சியாக, வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ் இந்து மகளிர் கல்லூரியில் சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.