அறிவுப் படுகொலைக்கு
ஆண்டு 42

ஆண்டு 42
மூண்ட நெருப்பு
நீண்டு எரிகிறது
இன்னமும் எம் இதயத்தில்

தென்னாசியாவின்
தமிழுக்கான தாய்வீடு
பாலரும் பாவலரும்
பயனுற்ற பள்ளிக்கூடம்
கலைமகள் கொலுகொண்ட
கல்விகருகூலம்
அறிவுப் பசிதீர்த்த
அமுத சுரபி
தாழ்பணிய மறுத்த தனால்
தாள் எரித்து மகிழ்ந்தான்

மூவேந்தர் காலத்து
முத்தமிழ் இலக்கியங்கள்
பாரது போற்றிய
பைந்தமிழ் பொக்கிசங்கள்
இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற அறிவாலயம்
ஒருலட்சம் நூல்களை
உள்ளடக்கிய நூலகம்
பனையோலை சுவடிமுதல்
இணையற்ற ஏடுகளை
இனவாத தீவைத்து
புத்தரின் த த்துவத்தை
புதுப்பித்தனர் சாம்பலினால்
நாசிகள் செய்ததுபோல
வாசிகசாலையை எரித்தனர்
பாவியரே?———-
ஏவியவனும் இல்லை இன்று
எரித்தவனும் இல்லை
பரலோகத்திலும் உங்களை
பாவம் சூழுமடா
வயிறெரியுதடா.
உன் வம்சத்துக்கும்
இந்தபழி வந்து
கொண்டிருக்குமடா

உரசிய தீக்குச்சி
உள்வாங்கியது
சுதந்திர தன்னாட்சி
இனவாத தீயினால்
தமிழ்மானம் விளித்தது
எரிந்த பக்கங்கள்
எழுந்து பேசும்
அஸ்த்தியாகிய அத்தியாயம்
அத்திவாரமாய் எழும்
கருகிய நூல்கள் புது
காவியம் படைக்கும்
சாம்பலாகிய காகிதம் புது
சரித்திரம் படைக்கும்
அக்கினியில் அடங்கிய
பொக்கிசம் எல்லாமே
அண்ணனின் காலத்தில்,
பொன்னெழில் பெறும்
கரியினில் கலந்திட்ட
காவியங்கள் எல்லாமே
கரிகாலன். காலத்தில்
பெருநூலகமாய்
ஈழத்தில் எழும்

எழுதுவது : ஆச்சியின் பேத்தி ரேணுகா உதயகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *