யாழ் பல்கலை வணிகபீடத்தில் திறக்கப்பட்ட ஆங்கில ஆய்வு கூடமும் திறன் விரிவுரை மண்டபமும்

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ பீடத்தின் கீழ் ஆங்கில மொழி ஆய்வுகூடம் மற்றும் திறன் விரிவுரை மண்டபம் ஆகியன உத்தியோகபூர்வமாக 14ம் திகதி பெப்பிரவரி மாதம் 2022ம் ஆண்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்திட்டம் எஹெட் திட்டத்தின் ன் கீழ் (Accelerating Higher Education Expansion and Development – AHEAD) யாழ்பல்கலைக்கழக வணிகபீடத்தின் மனிதவள முகாமைத்துறையின் கீழ் உள்ளடக்கப்பட்டதாகும்.

குறித்த ஆய்வுகூடம் மற்றும் திறன் விரிவுரை மண்டபம் ஆகியவற்றை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

சிறப்பு விருந்தினராக AHEAD செயற்றிட்ட பணிப்பாளர் கலாநிதி ஈ.வை.ஏ. சார்ள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார்.

இவர்களோடு சிரேஷ்ட நிர்வாக அலுவலர் சிரேஷ்ட நிர்வாக அலுவலர் கே.கனகரட்ணம் அவர்களும், வணிக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாஸன் அவர்களும் , மனித வள முகாமைத்துவத் துறைத் தலைவர் கலாநிதி (திருமதி) ரி.ரவீந்திரன் அவர்களும் , ஆங்கில மொழி கற்பித்தல் துறைத்தலைவர் கலாநிதி எஸ். சண்முகநாதன் அவர்களும் மற்றும் விரிவுரையாளர்கள், பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.