எரி பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.

அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள  நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைவடைந்துள்ளதாகவும்,அதன் புதிய விலை 215 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *