குருப்பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி ?

எழுதியது : கோபி சிவம் குருக்கள்

இந்த ஆண்டின் குருப்பெயர்ச்சி ஒவ்வொரு ராசியினருக்கும் தரக்கூடிய பலன்களை விரிவாகப்பார்ப்போம்.

 

மேஸம்
தன குரு பெயரிலேயே இருக்கிறது தன யோகம்நிறைய பணம் கட்டு கட்டாக வரும்
அதாவது இரண்டினில் குரு திரண்டிடும் பெரும் நிதி என்று பழமொழி உண்டு
குடும்ப மகிழ்ச்சி உண்டாகும்
ஆரோக்கியம் கிடைக்கும் கடன் கிடைக்கும்
கடன் அடைபடும்
திருமணம் விரைவில் கை கூடும்
ஆயுள் கூடும்
பட்டம் பதவி உயர்வு கிடைக்கும்

ரிஸபம்
ஜென்ம குரு
மிகவும் நன்மைகள் தரும் குரு இந்த ஜென்ம குரு ஆனால்
வெளி ஊர் அல்லது வெளி நாட்டில்
என்வே உள்ளூர் தோல்வி உறுதி
வெளி ஊர் வெற்றி கனி உண்டாகும்
வெளி ஊர் பயணத்தால்
குடும்ப பிரச்சினை காணாமல் போகும்
கணவன் மனைவி உறவு சீராகும்
தந்தை வழி பொறுமை காத்து பெருமை அடைவீர்கள்

மிதுனம்
விரய குரு
அதாவது இந்த வருடம் நிறைய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்
நகைகள் வாங்கும் யோகம் வீடு வாகனம் வழியில் யோகம் உண்டாகும்
பயணம் பயன் தரும்
பேங்க் சப்போர்ட் கிடைக்கும்
கடன் நிச்சயமாக வாங்க வேண்டும்
அதை வைத்து வீடு வாகனம் யோகம் உண்டாகும்
நிம்மதி ஏற்படும்
நல்ல உறக்கம் வரும்
திருமணம் விரைவில் கைகூடும்

கடகம்
லாப குரு
நீண்ட காலமாக சனி மற்றும் குருவால் சிரமப்பட்டு கொண்டு இருந்த உங்களுக்கு
இனி விடிவு காலம் தான்
லாபம் அதிகரிக்கும் நல்ல நேரம்
பெரியவங்க ஆசி கிடைக்கும்
தொட்டது துலங்கும்
உங்கள் முயற்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்
நல்ல போஜனம் உண்டாகும்
பயணம் பயன் தரும்
குழந்தை பாக்கியம் வேண்டியவர்க்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
திருமண யோகம் உண்டாகும்
கடன் அடைபடும்
கடன் கிடைக்கும்
சுறுசுறுப்பாக இருப்பீர்கள்

சிம்மம்
தசம குரு
வேலை பார்க்கும் இடத்தில் அதிக வேலை இருக்கும்
புதிய முயற்சி தவிர்த்து நன்மை பெறுவீர்கள்
வேலை தேடுபவர்க்கு வெளி ஊர் வெளி நாட்டில் வேலை கிடைக்கும்
நிறைய பயணம் உண்டாகும்
புதிய நண்பர்கள் அறிமுகம் உண்டாகும்
அந்நிய நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்
குடும்ப சுபச் செலவுகள் உண்டாகும்
பணத்தை சேமிக்க வேண்டாம்
பொருளாகும் வாங்கி விடுங்கள்
இந்த குரு பொருள் சேரும் நல்ல குரு

கன்னி
பாக்ய குரு
இது வரை தடை பட்டு வந்த காரியங்கள் வெற்றி பெறும்
பதவி உயர்வு கிடைக்கும்
புதிய வேலை கிடைக்கும் அரசு வேலை கிடைக்கும்
ஆரோக்கியம் தரும்
முகத்தில் தேஜஸ் கூடும்
நீங்கள் போடும் திட்டங்கள் பலிக்கும்
பெரிய விருதுகள் கிடைக்கும்
புதிய தொழில் வழி சிறப்பு யோகம் உண்டாகும்
வம்பு வழக்கு கோர்ட் எல்லாம் இனி உங்கள் பக்கம் தான்

துலாம் 80 சதவீதம்
அட்டம குரு
துலாம் ராசிப் படி
ஆறுக்கு உரியவர் 8 ல் மறைவது ராஜ யோகம் உண்டாகும்
பணம் பல வழிகளில் வரும் பல வழிகளில் செலவுகளும் உண்டாகும்
கவலையை விடுங்கள்
மகிழ்ச்சி உடன் கடக்கும் நல்ல வருடம்
தாய்க்கு உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
உங்கள் ஆரோக்கியம் கவனம்
வீடு வாகன வகையில் ரிப்பேர் வந்து சரி ஆகும்
வெற்றி தேடி வரும் நல்ல வருடம்

விருச்சிகம்
நீண்ட கால இழுபறி நிலையில் நல்ல நேரம் ஆரம்பம் ஆகி விட்டது
இனி கவலை வேண்டாம்
சுப காரியங்கள் அணி வகுக்கும்
வேண்டும் நபர்களுக்கு
திருமணம் விரைவில் கைகூடும்
குழந்தை பாக்கியம் கிடைக்கும்
உங்கள் முயற்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்
சிறிய வாகனம் யோகம் உண்டாகும்
நல்ல போஜனம் உண்டாகும்
தொழில் வழி லாபம் கிடைக்கும்

தனுஸ்,
ரோக குரு
ஆறில் குரு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்று இருக்கும்
ஆமாம் தீயவை மாறி நல்லது நடக்கும் நல்ல வருடம்
தொழில் வழி இடைஞ்சல் செய்தவர்கள் காணாமல் போகும் நல்ல வருடம்
புதிய
வேலை கிடைக்கும் நல்ல நேரம்
வேலை பழு‌ கூடும்
புரமோஷன் கிடைக்கும்
பண வரவு அதிகரிக்கும்

மகரம்
ஏழரைச்சனி மூலம் படாத பாடு பட்டு வந்த நீங்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாம்
புதிய பொறுப்புகளை கிடைக்கும்
புதிய கௌரவம் அந்தஸ்து உயரும்
ஆளுமை கூடும்
தந்தை வழி லாபம் கிடைக்கும்
குல தெய்வ அருள் கிடைக்கும்
பெரியவர்கள் ஆசி கிடைக்கும்
லாபம் கூடும்
குழந்தைகள் வழி யோகம் உண்டாகும்
வேண்டுவோர்க்கு
திருமணம் விரைவில் கைகூடும்
குழந்தை பாக்கியம் கிடைக்கும்

கும்பம்
அர்த்தாஸ்டம குரு
போன முறை இருந்த சிரமங்கள் இந்த முறை இருக்காது
குறிப்பாக சொத்துகள் சேரும்
வீடு வாகனம் வழியில் யோகம் உண்டாகும்
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்
தாய்க்கு உடல் நலம் கவனம்
வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் பொறுமை மூலம் பாராட்டு கிடைக்கும் நல்ல வருடம்
திடீர் பண இழப்பு திடீர் பண வரவு பண உதவி உண்டாகும்

மீனம்
மூன்றாம் இட குரு
மூன்றாம் இட குரு நடப்பில் தான் துரியோதனன் படை தோல்வி அடைந்தது
அதனால் உங்கள் எதிரிகள் தோல்வி அடைவது உறுதி
நல்லவர்கள் வெற்றி உறுதி
மூத்த சகோதரர் சகோதரி வழி பொறுமை அவசியம்
பண புழக்கம் அதிகரிக்கும்
புதிய நண்பர்கள் உதவி கிடைக்கும்
பயணம் உண்டாகும்
கோவில் தரிசனம் கூடும் நல்ல வருடம் ,

இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் நல்ல எதிர்காலத்தை தந்து சிறப்பாக வாழ்ந்திட அனைவருக்கும் ஆசிகள் கிடைக்க வேண்டுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *